மூன்று நண்பர்கள் காபி ஷாப் போனார்களாம் .மூவரும் வெவ்வேறு நாட்டவர்கள்.
அமெரிக்கன்,இந்தியன் ,சைனீஸ் மூவரும் ஒரே கல்லூரியில் படித்து ஒரே அலுவலகத்தில் வேலையும் கிடைத்து அமர்ந்தனர்.
காபி ஷாப்பில் காபிக்கு ஆர்டர் பண்ணிவிட்டு ,ஒவ்வொருவரும் தத்தம் க்ரெடிட் கார்டு கரன்ஸி என்று செக் பண்ணிக் கொண்டார்கள்.
யார் காபிக்குக் காசு தருவது, அல்லது,அதை எப்படி ,யார் தலையில் ,கட்டிவிடலாம் என்று யோசித்தபடி அமர்ந்திருந்தனர்.
மூன்று பேருமே யமகாதகர்கள்.
ஒருவன் அதாவது சைனீஸ்,ரொம்ப முக்கியமான செய்தியை ,விவரிப்பது போல் உப்பு பெறாத விஷயத்தை ,விளக்கிக் கொண்டிருந்தான்,இதன் மூலம் ,பில் தன் பக்கம் வராதபடி பார்த்துக் கொண்டான்
அடுத்தவன்,அமெரிக்கன்,தங்களுக்குக் காபி எடுத்து வந்தவனை, அதிகப் படியான நட்போடு பார்ப்பது போல் அவ்வப்போது அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே இருந்தான்.அந்த நன்றியைக் காட்டும் வண்ணம் ,பில் தன் பக்கம் நீளாது என்ற ஐடியா.
தன்னை யாரும் தொந்தரவு செய்து விடக்கூடாது என்ற பாவனையில் ,இந்தியன் தன் சிந்தனையை ,எங்கோ சூனியத்தில் உலவ விட்டவனாக யோகியாக நடிப்பால் தன்னைக் கண்டு பயமோ மரியாதையோ ஏற்படும் வண்ணம் நிலைமையை உண்டு பண்ணிக் கொண்டிருக்க ,
இவர்கள் கேட்ட காபி வந்தது.
மூவரும் கோப்பையை எடுத்து ,டிகாக்ஷன்,பால் ,கலந்து தேவையான சர்க்கரையையும் போட்டபடி கலக்கத் தொடங்கினர்
[இதே ஸ்டைலில் ஆத்துக்காரி கொண்டு வந்து வைத்தால் ,யார் காபியைக் கலக்றது உங்க அப்பனா வருவான் என்று கேட்பார்கள்.இப்பொழுது அது முக்கியமில்லை,அதற்கென்று வேறு பதிவு போடுகிறேன்]
அதில் சைனீஸ் ஸ்பூனை இடது பக்கமாகவும் வலது பக்கமாகவும் கோப்பைக்குள் ஆடவிட்டு வித்தியாசமாகக் கலக்கினார்.
அமெரிக்கன்,கூட்டல் வடிவில் மேலிருந்து கீழ் இடவலம் என்று ஓட்டினார்.
இந்தியன் எப்பொழுதும் எதையாவது வித்தியாசமாகச் செய்து காட்ட வேண்டும் என்று நினைப்பவனாயிற்றே.கடிகாரமுள் ஓடுவது போல் இப்படி ஒரு சுற்று ,மறுபடியும் திரும்பி ஒரு சுற்று இப்படியாக மாற்றி மாற்றி சுற்றிக் கொண்டே தன்னை எல்லோரும் கவனிக்கிறார்களா என்ற பார்வையோடு பெருமிதத்தோடு ஸ்பூனை இயக்கினார்.
ஒருவழியாக மூவருமாக காபிக்கு சமமாக பணம் கொடுத்துவிட்டு அகன்றனர்.
சரி இப்பொழுதுதான் உங்களுக்கான கேள்வி.
ஆரம்பத்திலிருந்து பதிவை ,எத்தனை முறை வேண்டுமென்றாலும் வாசித்துப் பார்த்துக் கொள்ளலாம்
ஆனால் ,கேள்வியை வாசித்தபின் மறுபடியும் மேட்டருக்குப் போகக் கூடாது ஓகேவா?
மூன்று பேரும் தனித்தன்மையோடு ஸ்பூனை கையாண்டதன் காரணம் என்ன?
தமிழிஷ் ஓட்டுப் பெட்டி பார்த்து, ஓட்டு போட்டுட்டு போங்க