Rajaratnam (Hindu Subramaniam

Is your surname Subramaniam?

Research the Subramaniam family

Rajaratnam (Hindu Subramaniam's Geni Profile

Records for Rajaratnam (Hindu Subramaniam

18,409 Records

Share your family tree and photos with the people you know and love

  • Build your family tree online
  • Share photos and videos
  • Smart Matching™ technology
  • Free!

Rajaratnam (Hindu Subramaniam

Tamil: Board)கல்விக் கொடையாளர் இந்துபோட் இராசரத்தினம் Subramaniam
Birthdate: (85)
Birthplace: Kopai, Srilanka
Death: March 12, 1970 (81-89)
Immediate Family:

Son of Subramaniam Kathiresu and Meenachipillai Subramaniam
Husband of Sellama Rajaratnam
Father of Kathiresu; Mangaiarkarasi Kumarasamy; Kanagambigai Rajaratnam; Yogambigai Maheswaran; Private and 2 others
Brother of Private; Ragunathar Subramaniam and Paramanayagam

Managed by: Private User
Last Updated:
view all 13

Immediate Family

About Rajaratnam (Hindu Subramaniam

CTBC-Canadian Tamil Broadcasting Corporation

.

.

.

.

.

.

. .

About Board)கல்விக் கொடையாளர் இந்துபோட் இராசரத்தினம் Subramaniam (Tamil)

கல்விக் கொடையாளர் இந்துபோட் இராசரத்தினம்

கடந்த சகாப்த்தங்களில் சைவம் காத்த சான்றோர்கள் வரிசையில் சு. இராசரத்தினம் அவர்களும் ஒருவர். 1884 ஆம் ஆண்டு ஜூலை 4ம் திகதி அவதரித்த இவர், நல்லூர் ஆறுமுகநாவலர் மற்றும் அருணாசல உபாத்தியார் போன்றோர்களின் சைவ மரபினைப் பின்பற்றி, தம் பிறப்பின் பயனை இலங்கைவாழ் சைவத் தமிழர்களுக்கு அர்பணித்தவர் . யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கொழும்பு சட்டக்கல்லூரியில் உயர் கல்வியையும் பயின்று, பெருஞ்சட்ட வல்லுனரானார். ஆங்கிலேய அரசின்கீழ் நசுக்கப்பட்டு சிதைந்திருந்த சைவக் கல்வி மரபினை கட்டியெழுப்ப, சேர்.பொன். இராமநாதன் அவர்களின் துணையுடன் 1923 ஆம் ஆண்டில் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தை நிறுவி, அதன் செயலாளராகவும் தலைவராகவும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இவரது இடைவிடா முயற்சிகளின் பயனாக 1958 ஆம் ஆண்டில், இவரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் சங்கத்துடன், 187 அரசாங்க நன்கொடை பெறும் பள்ளிக்கூடங்கள் இணைந்துகொண்டன. சைவ சமயத்தின் முதல் நூல்களான திருமுறைகளை பண்ணோடு படிப்பதிலேயே முழுப் பலனும் அடக்கம் என்பதனை நம்பிக்கையாகக் கொண்ட இவர், 1954 ஆம் ஆண்டில் தனது வித்தியாசாலையில் பண்ணிசை ஆசிரியர்களை நியமித்து, பண்ணிசை வகுப்புக்களை ஆரம்பித்தார். இன்றைய சிறாரே நாளைய தூண்கள் என்பதனை நன்குணர்ந்துகொண்ட இராசரத்தினம் அவர்கள், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை, பல வித்தியாசாலைகளை அமைத்தார். யாழ் குடாநாடு, வவுனியா, முல்லைத்தீவு, சிலாபம், புத்தளம், நாவலப்பிட்டி என்பன அவர் அடிக்கல்லிட்ட பாடசாலைகளில் சிலவாகும். ஈழத்து எழுத்தாளர், வரலாற்றாசிரியர், வரலாற்றாய்வாளர் க.சி.குலரத்தினம் குறிப்பிடுகையில், அவருடைய செயல் வீரத்தை கல்வித்துறையின் கட்டளைச் சட்டங்கள், விதிகள், உபவிதிகள், பிரமாணங்கள் என்பன யாவும் சட்டக் கலையின் துறைபோன இராசரத்தினம் அவர்களுக்கு கைவந்த பாடம். சட்டங்களை ஊடறுத்துப் போகவும் புறநடை கண்டு சட்டங்களையே புறங்காண வைப்பதிலும் அவர் நிபுணர். அவர் சட்டங்களை தவிடுபொடியாக்கியதும் உண்டு. முன்னர் சட்டத்துறையின் விதிகள், பாரம்பரியங்கள்,வழமைகள், முன்நிகழ்வுகள் எல்லாவற்றையும் கருத்தூன்றிக் கற்று அவற்றை ஆயிரக்கணக்கான பக்கங்களில் திரட்டு என வெளியிட்ட மேதை அவர். பெரியார் இராசரத்தினம் தான் கற்ற கல்வியையும் பெற்ற புலமையையும் வறுமையால் வாடுவோருக்கும் ஏதிலிகளுக்கும் பயன்படுத்திய கொடை வள்ளல். ஏறக்குறைய 185 பாடசாலைகளை அமைத்து காலத்திற்கேற்ற கல்விக்கொடையை வழங்க வேண்டுமென எண்ணிப் பணி செய்தார். ஏறக்குறைய 40 ஆண்டுகள் சைவ வித்தியா விருத்திச் சங்கப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் ஒரு வரலாற்று நாயகன். கல்வி நிலையிலே பின்தங்கியிருந்த தீவுப்பகுதிகளிலே பல பாடசாலைகளை நிறுவினார். அங்குள்ள மக்கள் அவருடைய கல்விக் கொடையால் வாழ்வில் உயர்ச்சி பெற்றனர். இன்று பல கல்வி மான்களின் பெற்றோர்கள் அத்தகைய கொடையால் உயர்ந்தது மட்டுமன்றி தமது தலைமுறையினரையும் கல்விப் பெறுபேறு உயர்வடைய செய்துள்ளனர். திருநெல்வேலியில் செம்பாட்டு மண் வளத்தில் அதற்கென ஒரு சிறுவர் இல்லத்தை அமைத்தார். “ முத்துத்தம்பி அனாத சாலை” எனப் பெயரிட்டார். அச்சிறுவர் இல்லம் டாக்டர் சுப்பிரமணியத்தின் பொருட்கொடையாலும் இராசரத்தினத்தின் திட்டச்செயற்பாடுகளாலும் மேலும் வளர்ந்தது. தொடக்கத்தில் ஆண் பிள்ளைகளுக்கே இங்கு தங்கிக்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. 10 ஆண்டுகளின் பின்னர் ஏ.செல்லப்பா அவர்களின் முயற்சியால் பெண் பிள்ளைகளும் அவ்வாய்ப்பைப் பெற்றனர். இது பெண்களை அறிவுள்ளவர்களாகவும் ஆசிரியர்களாகவும் மாற்றியது. முத்துத்தம்பி இல்லச் சிறாரின் முதனிலை, இடைநிலை கல்விகளை நிறைவு செய்ய உதவியது. இராசரத்தினம் நிறுவிய “சைவ ஆசிரியர் கலாசாலை” தொழில்வாய்ப்பையும் நல்கியது. காலச் சுற்றோட்டத்தில் பல மாணவ மாணவியர்கள் கல்விப் பயிற்சியை முடித்து பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக வெளியேறிய போது கல்விக் கொடையின் பெறுமானத்தை சமூகம் அறிந்தது. இலங்கைத்தீவின் வடபாலிருந்து தென்பால் வரை சென்று கல்விக்கொடைக்காக பாடசாலை நிறுவும் பணியை செய்த அப்பெரியாரின் அன்புள்ளம் போற்றுதற்குரியது. இவரது செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்ட போது சற்றும் தளராது பணி செய்தமையால் இன்று வரை சைவ வித்தியா விருத்திச் சங்கம் நிலைபெறுகிறது என குறிப்பிடுகிறார். இந்துபோட் இராசரத்தினம் 12.03.1970இல் இறையடி சேர்ந்தார்.
view all 11

Rajaratnam (Hindu Subramaniam's Timeline

1884
July 4, 1884
Srilanka
1917
May 23, 1917
Age 32
1919
July 3, 1919
Age 34
1923
February 28, 1923
Age 38
1926
August 3, 1926
Age 42
1970
March 12, 1970
Age 85

CTBC-Canadian Tamil Broadcasting Corporation

Like This Page · 10 hours ago

..

Write a comment...
Press Enter to post..

.

.

.

.

.

.
.

March 12, 1970
Age 85