MAHABHARATHAM IN TAMIL

Started by Private on Tuesday, February 8, 2022
Problem with this page?

Participants:

  • Private
    Geni member

Related Projects:

Private
2/8/2022 at 8:07 AM

Mahabharatam in tamil





மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-1
..ஆதிவம்சாவதரணப் பர்வம்
."ஜனமேஜயன் நாக வேள்வியில் அமர்ந்திருக்கிறான், என்று கேள்விப்பட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அங்கே சென்றார்.
அந்தப் பாண்டவர்களின் பாட்டன் , கன்னிகையான சத்தியவதிக்கும், சக்தியின் மைந்தன் பராசரருக்கும், யமுனையின் தீவு ஒன்றில் பிறந்தவராவார்.
அந்தச் சிறப்பு வாய்ந்தவர் {வியாசர்}, பிறந்தவுடன் தனது விருப்பத்தினால் மட்டுமே விருப்பிய உடனே தன் சுய சங்கல்பத்தாலேயே தன் உடலை வளர்த்து, வேதங்களையும் அதன் கிளைகளையும், வரலாறுகள் அனைத்தையும் கற்றார்.
இங்குச் சக்திரி என்று சொல்லப்படுபவர், வசிஷ்டரின் புதல்வராவார்.
தவங்களாலும், முயற்சியுடன் கூடிய கல்வியாலும், அத்யாயனத்தினாலும், விரதங்களாலும், உண்ணாநோன்புகளாலும், குலத்தினாலும், யாகத்தினாலும் மற்றவர் அடைய முடியாதவற்றை வேதங்களின் முழுமையான அறிவை அவர் எளிதாக அடைந்தார்.
வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான வியாசர், வேதங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்தார். அந்த பிராமண முனிவர் பிரம்மனைக் குறித்த ஞானத்துடன் இருந்தார்.
இறந்த காலத்தை மனத்தால் அறிந்தார். அவர் தெய்வீகத்தன்மையுடன், உண்மையைப் போற்றி வாழ்ந்தார்.
புனிதமான செயல்களையும், பெரும் புகழையும் கொண்ட வியாசர், சந்தனுவின் பரம்பரை தொடர்ச்சிக்காகப் பாண்டு, திருதராஷ்டிரன், விதுரன் ஆகியோரை பெற்றெடுத்தார்.
அந்த வியாசர், வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கறிந்த தனது சீடர் வைசம்பாயனர் போன்றோருடன், ஜனமேஜயன் அமர்ந்திருந்த வேள்விச்சாலைக்கு வந்தார்.
மன்னன் ஜனமேஜயன், சதயஸ்யர்களும், பட்டாபிஷேகம் செய்துகொண்ட பலநாட்டு மன்னர்களும், பிரம்மனுக்கு ஒப்பான ரித்விக்குகளும் சூழ அந்த வேள்வியில் இந்திரனைப் போல அமர்ந்திருப்பதைக் கண்டார்.
பாரதக் குலத்தின் முதன்மையானவனும், அரசமுனியுமான அந்த ஜனமேஜயன், வியாசர் வருவதைக் கண்டு, தன்னைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் பெருமகிழ்வோடு வேகமாக முன்வந்து அவரை வரவேற்றான்.
ஜனமேஜயன் சதஸ்யர்களின் அனுமதியோடு, இந்திரன் பிருஹஸ்பதிக்குக் கொடுத்ததைப் போல, அந்த முனிவருக்கு ஒரு பொன் ஆசனத்தைக் கொடுத்தான்.
வரங்களை அருளவல்லவரும், தெய்வீக முனிவர்களாலும் போற்றபடுபவருமான, அந்த முனிவர் அமர்ந்தபோது, ஜனமேஜயன் சாத்திரங்களில் சொல்லப்பட்ட உரிய மரியாதைகளுடன் வணங்கினான்.
மன்னன் , முற்றிலும் தகுதிவாய்ந்த தனது பாட்டன் கிருஷ்ண துவைபாயனர்(வியாசருக்கு) கால்கள் மற்றும் வாயைக் கழுவ நீரும், அர்க்கியமும், பசுக்களையும் கொடுத்தான்.
அந்தப் பாண்டவ ஜனமேஜயனின் காணிக்கைகளை ஏற்று, பசுக்களைக் கொல்லக்கூடாது என்று சொல்லி, வியாசர் பெரும் மனநிறைவு கொண்டார்.
அந்த மரியாதைகளுக்குப் பிறகு ஜனமேஜயன் தனது முப்பாட்டனை வணங்கி, மகிழ்ச்சியுடன் அமர்ந்து அவரது நலத்தைக் கேட்டறிந்தான்.
அந்தச் சிறப்புமிக்க வியாசர் ஜனமேஜயன் மீது தனது பார்வையைச் செலுத்தி அவனின் நலத்தைப் பற்றிக் கேட்டார். சதஸ்யர்களால் வணங்கப்பட்ட அவர் , பதிலுக்கு அவர்களை வணங்கினார்.
அதன்பிறகு, ஜனமேஜயன் தனது சதஸ்யர்களுடன் கரங்கள் கூப்பி, வியாசரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான்.
"ஓ பிராமணரே {வியாசரே}, கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் செயல்களைத் தங்கள் கண்ணாலேயே கண்டிருக்கிறீர். நீங்கள் உரைக்க அந்த வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன்.
கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களை செயற்கரிய காரியங்களைச் செய்ய வைத்த அந்தச் சச்சரவுக்குக் காரணம் என்ன? எண்ணற்ற உயிர்கள் மடியக் காரணமான அந்தப் பெரும் போர் எனது பாட்டன்களுக்குள் ஏன் நடந்தது? அவர்கள் தெளிந்த அறிவும் விதியால் மூடப்பட்டதோ? ஓ பிராமணர்களில் சிறந்தவரே {வியாசரே}, அதை எனக்கு முழுமையாக, எவை எவ்வாறு நடந்தனவோ அவற்றை அவ்வாறே சொல்வீராக" என்றான் ஜனமேஜயன்
ஜனமேஜயனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தனது அருகில் அமர்ந்திருந்த தமது சீடரான வைசம்பாயனரிடம்,
"பழங்காலத்தில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடந்த பிணக்குகளை, நீ என்னிடம் கேட்டறிந்தவாறே இந்த மன்னனுக்கு {ஜனமேஜயனுக்கு} முழுமையாகச் சொல்வாயாக" என்றார்
அதன்பிறகு அருள்நிறைந்த அந்த வைசம்பாயனர், தனது ஆசானின் கட்டளைப்படி மன்னனுக்கும் , சதஸ்யர்களுக்கும் மற்றும் அங்குக் கூடியிருந்த பிற மன்னர்களுக்கும் அந்த முழு வரலாற்றையும் கூறினார். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பகைமையையும், அவர்கள் முழுமையாக அழிந்ததையும் முழுமையாகச் சொன்னார்"
வைசம்பாயனர் சொன்னார், "எனது உடலின் எட்டுப் பகுதிகளும் தரையைத் தொட,
என் ஆசானை {வியாசரை} பக்தியுடனும், மரியாதையுடனும் முதற்கண் வணங்கி, இந்தச் சபையில் இருக்கும் பிராமணர்களையும், மற்ற கற்றவர்களையும் முழு மனத்துடன் வழிபட்டு, மூவுலகங்களிலும் புத்திசாலிகளில் முதன்மையான இந்த உயரான்ம முனிவர் வியாசரிடம் நான் கேட்டவற்றை முழுமையாக உரைக்கின்றேன்.
இதை அறியப்போகும் ஜனமேஜயனே, நீ பாரதம் என்று அழைக்கப்படும் இந்தத் தொகுப்பைக் கேட்கத் தகுதி வாய்ந்தவனே. எனது ஆசானின் கட்டளையில் தூண்டப்பட்டிருப்பதால் எனது இதயத்தில் அச்சத்தை நான் உணரவில்லை.
"ஓ ஜனமேஜயனே, கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒற்றுமையின்மை நிலவியது ஏன் என்றும், குருக்களின் ஆளும் ஆசையினால் நேர்ந்த சூதாட்டத்தைத் தொடர்ந்து, வனவாசம் ஏன் விதிக்கப்பட்டது என்றும் கேட்பாயாக. பாரதக் குலத்தில் சிறந்தவனே! ஜனமேஜயனே! கேட்க விரும்பிய உனக்கு அனைத்தையும் சொல்வேன்.
பாரதம் முழுமையாகப் படித்தல் அல்லது முழுமையாக உரைத்தல் என்பது எளிமையான காரியம் அல்ல. தகுதிபெற்றோரே அதைச் செய்துமுடிக்க இயலும்.
பாண்டவர்கள், தங்கள் தந்தையின் மரணத்தையடுத்து, காட்டிலிருந்து, ஹஸ்தினாபுரத்திற்கு வந்தனர். வந்து குறுகிய காலத்திற்குள், வில்வித்தையில் தேர்ந்தனர்.
பாண்டவர்கள் உடல் பலத்தாலும், சக்தியாலும், மனபலத்தாலும், குடிமக்களிடத்தில் பிரபலமாகவும், நற்பேறுகள் அருளப்பட்டு இருந்ததைத் கண்ட கௌரவர்கள் பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டனர்.
கோணல்புத்தி கொண்ட துரியோதனன், கர்ணன், சுபலனின் மைந்தன் சகுனி ஆகியோர் பாண்டவர்களைத் துன்புறுத்தவும், அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் ஆலோசித்து வந்தனர்.
அந்தத் தீயவனான துரியோதனன், எதிர்ப்பும் போட்டியுமற்ற அரசுரிமையைப் பெறுவதற்காக, தாய்மாமனான சகுனியின் ஆலோசனைப் படி பாண்டவர்களுக்கு இன்னலைச் செய்து வந்தான்.
ஒருநாள் திருதராஷ்டிரனின் அந்தத் தீய மகன் துரியோதனன் பீமனுக்கு விஷத்தைக் கொடுத்தான். ஆனால் ஓநாய் வயிறு கொண்ட பீமன் அந்த விஷத்தை உணவுடன் சேர்த்துச் செரித்து முடித்தான்.
அதன் பிறகும் அந்தப் பாவி துரியோதனன் கங்கையின் கரையில் தூங்கிக் கொண்டிருந்த பீமனைக் கட்டி நீரில் வீசி விட்டுச் சென்று விட்டான்.
ஆனால் பலம் பொருந்திய கைகளைக் கொண்ட பீமசேனன், அந்தக் குந்தியின் மைந்தன் பீமன் எழுந்து, தன்னைக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்துத் தன் வலியெல்லாம் அகன்று வெளியே வந்தான்.
பீமன் தூங்கிக் கொண்டிருக்கையிலும், நீரிலும் கடும் விஷம் கொண்ட கருநாகங்கள் அவனை உடலெங்கும் தீண்டின. இருப்பினும் பீமன் அழியவில்லை.
அப்படிப் பாண்டவர்கள், தங்கள் சகோதரர்களான கௌரவர்களால் துன்பப்படும் பொழுதெல்லாம், உயர்ந்த எண்ணம் கொண்ட விதுரன், கருத்தோடு பாண்டவர்களைக் கவனிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அந்தத் தீய காரியங்களை மட்டுப்படுத்தி, துன்பத்திலிருந்த அவர்களைக் காப்பாற்றினான்.
எப்படிப் பூலோக மனிதர்களின் இன்பத்தைச் இந்திரன் தக்கவைக்கிறானோ அப்படி விதுரன் பாண்டவர்களைத் தீயவற்றிலிருந்து விலக்கி வைத்தான்.
இப்படி மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பலவகைகளில் முயன்றும் பாண்டவர்கள் விதியாலும், எதிர்காலத்தில் முக்கியமான (குரு பரம்பரையை அழிக்க) காரணத்துக்காகவும் காப்பாற்றப்படும்போது, பாண்டவர்களை அழிப்பதில் தன் இயலாமையை உணர்ந்த துரியோதனன், கர்ணன், துச்சாசனன் உள்ளிட்ட தனது ஆலோசகர்கள் பலரையும் கூட்டி, திருதராஷ்டிரன் அறிய அரக்கு மாளிகை ஒன்றைக் கட்டச் செய்தான்.
மன்னன் திருதராஷ்டிரன், தன் மக்கள் மீதிருந்த பாசத்தாலும், ஆட்சி உரிமையின் மீதிருந்த ஆசையால் தூண்டப்பட்டும், பாண்டவர்களைத் தந்திரமாக வாரணாவதத்திற்கு அனுப்பினான்.
பாண்டவர்கள் தங்கள் தாயுடன் அஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினர். பாண்டவர்கள் நகரத்தைவிட்டு வெளியேறும் போது, விதுரன் நடக்கப் போகும் ஆபத்தையும், அதிலிருந்து தப்புவது எப்படி என்று சில யோசனைகளையும் பாண்டவர்களுக்குத் தெரிவித்தான்.
பாண்டவர்கள் வாரணாவதத்தை அடைந்து குந்தியுடன் வாழ்ந்து வந்தனர். திருதராஷ்டிரனின் உத்தரவை ஏற்றுக் கொண்டு வாரணாவதத்தில், அந்த அரக்காலான வீட்டில் எதிரிகளை அழிப்பதில் சிறப்புவாய்ந்தவர்களான அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
அந்த இடத்தில புரோச்சனனிடம் இருந்து விழிப்புடன் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு ஒரு வருடம் அங்கே வாழ்ந்தனர். விதுரனின் வழிகாட்டுதல்படி, ஒரு சுரங்கப் பாதையை அமைத்து, அந்த அரக்காலான வீட்டுக்கு நெருப்பு வைத்துப் அவர்களது எதிரியும், துரியோதனனின் ஒற்றனுமான புரோச்சனனை எரித்துக் கொன்றனர். பாண்டவர்கள், பயத்துடனும், கவலையுடனும், குந்தியை அழைத்துக் கொண்டு தப்பித்தனர்.
கானகத்திற்குள் அருவி ஒன்றின் அருகில் ஒரு ராட்சசனைக் கொன்றனர். திருதராஷ்டிரனின் மைந்தர்களுக்குப் பயந்து, தங்களது எந்தச் செயலும் தங்களை வெளிக்காட்டிவிடும் என்று அஞ்சியபடியே பாண்டவர்கள் அந்த இருளில் தப்பிச் சென்றனர். இங்கே பீமன் ஹிடிம்பையை மனைவியாக அடைந்ததால், அவள் மூலமாகக் கடோத்கசன் பிறந்தான்.
கடும் நோன்புகளை நோற்பவர்களும், வேதங்களை நன்கு அறிந்தவர்களுமான பாண்டவர்கள், ஏகச்சக்கரம் என்ற நகரத்திற்குச் சென்று, அங்கே பிரம்மச்சாரிகளாக வேடம் பூண்டு மறைந்து வாழ்ந்தனர்.
பாண்டவர்கள், அந்த நகரில் ஒரு பிராமணரின் வீட்டில் சிறிது காலம் யாவற்றையும் தவிர்த்துத் தன்னடகத்துடன் வாழ்ந்தனர்.
இங்கேதான் பெரும் கரங்களைக் கொண்ட பீமன், பசிகொண்டவனும், பலம்பொருந்தியவனும், மனிதர்களை உண்ணும் ராட்சசனுமான பகாசுரனைச் சந்தித்தான்
அந்தப் பாண்டுவின் மைந்தனும், மனிதர்களில் புலியுமான பீமன், தனது பெருத்த கரங்களைக் கொண்டு பகாசுரனை வேகமாகக் கொன்று அங்கு வாழ்ந்த குடிமக்களைக் காப்பாற்றிப் பயத்திலிருந்து விடுவித்தான்.
பாண்டவர்கள் அதன்பிறகு, கிருஷ்ணை (பாஞ்சால இளவரசி) திரௌபதி, கூடியிருக்கும் இளவரசர்களுக்கிடையில் ஒரு கணவனைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள் என்பதை அறிந்தனர். அதைக் கேட்டதும் பாண்டவர்கள் பாஞ்சாலத்திற்குச் சென்று அந்த திரௌபதியை அடைந்தனர்.
அப்படித் திரௌபதியை பொதுவான மனைவியாக அடைந்து, பாஞ்சாலத்தின் தலைநகர் காம்பில்யத்தில் ஒரு வருடம் வாழ்ந்தனர். அதன்பிறகு அனைவராலும் பாண்டவர்கள் அறியப்பட்டதும், பாண்டவர்கள், அஸ்தினாபுரம் திரும்பினர்.
அங்கே சென்றதும் திருதராஷ்டிரனாலும், சந்தனுவின் மைந்தனான பீஷ்மராலும் "ஓ பாண்டவர்களே, உங்களுக்கும் உங்கள் தம்பிகளுக்கும் கருத்துப் பேதங்கள் ஏற்படாதிருக்க, உங்களுக்குக் காண்டவபிரஸ்தத்தை இருப்பிடமாகத் {அளிக்கத்} தீர்மானித்திருக்கிறோம். ஆகையால், எல்லாப் பொறாமைகளையும் மறந்து தூக்கியெறிந்துவிட்டு, பல நகரங்களும், பல அகலமான சாலைகளும் கொண்ட காண்டவபிரஸ்தத்துக்குச் சென்று அங்கு வாழுங்கள்" என்றனர்.
அதன்படி பாண்டவர்கள் தங்கள் நண்பர்களுடனும், தொண்டர்களுடனும், பலவகையான ஆபரணங்களையும் ரத்தின கற்களையும் எடுத்துக் கொண்டு காண்டவபிரஸ்தம் சென்றனர். அங்கே அந்தப் குந்தியின் மைந்தர்கள் பல வருடங்கள் தங்கி இருந்தனர்.
பல நாடுகளைத் தங்கள் பலத்தால் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தங்கள் இதயத்தை அறத்தின்பால் ஈடுபடுத்தி, உண்மையை உறுதியாக ஏற்று, அடைந்த செல்வத்தால் நிலைத்தடுமாறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், பல தீமைகளை அழித்தும் பாண்டவர்கள் பலத்தில் வளர்ந்தனர். புகழ் மிக்கப் பீமன் கிழக்கை வென்றான்,
வீரனான அர்ஜுனன் வடக்கை வென்றான், நகுலன் மேற்கை வென்றான், எதிரி வீரர்களை அழிப்பவனான சகாதேவன் தெற்கை வென்றான். இவையெல்லாம் நடந்தபிறகு, பாண்டவர்களது ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. சூரியனைப் போன்ற ஐந்து பாண்டவர்களோடு சேர்ந்து,பூமியானது ஆறு சூரியன்களைக் கொண்டதாகக் காணப்பட்டது. அதன்பிறகு, பெரும் சக்தியையும், வீரத்தையும் கொடையாகக் கொண்ட நீதிமானான யுதிஷ்டிரன், தனக்கு உயிரை விட மேலானவனும், இடது கையாலும் வில்லின் நாணை இழுக்கும் சக்தி கொண்டவனுமான அர்ஜுனனைச் சில காரணங்களுக்காகத் காட்டிற்கு அனுப்பினான்.
மனிதர்களில் புலியும், உறுதியான ஆன்மாகக் கொண்டவனுமான அர்ஜுனன், அனைத்து அறங்களையும் கொடையாகக் கொண்டு, பதினோரு வருடங்களும், பதினோரு மாதங்களும் கானகத்தில் வாழ்ந்தான்
இந்தக் காலத்தில், ஒரு சமயம், அர்ஜுனன் துவாரகையில் இருக்கும் கிருஷ்ணனிடம் சென்றான். அங்கே வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இளைய தங்கை சுபத்திரையைத் தனது மனைவியாகக் கொண்டான். பெரும் இந்திரனுடன் சச்சி இருந்தது போல, அல்லது கிருஷ்ணனுடன் ஸ்ரீ இருந்ததுபோல,சுபத்திரை பாண்டுவின் மகன் அர்ஜுனனுடன் மகிழ்ச்சியாக இருந்தாள்.
அதன்பிறகு , குந்தியின் மைந்தன் அர்ஜுனன், வாசுதேவனுடன் சேர்ந்து வேள்வி நெய்யைச் சுமக்கும் அக்னியை (அக்னியின் செரியாமையைப் போக்க அங்கே இருந்த மருத்துவ மூலிகைகளை எரித்து) காண்டவ வனத்தில் மனநிறைவு கொள்ளச் செய்தான்.
அர்ஜுனனுக்குக் கேசவனின் {கிருஷ்ணனின்} உதவி இருக்கும்போது, ஒப்பற்ற மிக உயர்ந்த ஆதாரங்களைக் கொண்ட விஷ்ணுவுக்கு எதிரிகளை அழிப்பது எப்படிக் கடினமில்லையோ அப்படி இந்தப் பணியும் அர்ஜுனனுக்குக் கடினமாகத் தெரியவில்லை.
அக்னி அர்ஜுனனுக்கு அற்புதமான வில்லான காண்டீவத்தையும்,எப்போதும் வற்றாத அம்பறாத்தூளியையும், கருடனைக் கொடிக்கம்பத்தில் கொண்ட ஒரு தேரையும் கொடுத்தான்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அர்ஜுனன் பெரும் அசுரனை (மயனை) நெருப்பில் விழும் அச்சத்திலிருந்து காப்பாற்றினான்.நன்றியுடைய மயன், அனைத்து வகையான நகைகளையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு பாண்டவர்களுக்காக ஒரு தெய்வீக அரண்மனையைக் கட்டிக் கொடுத்தான். தீய துரியோதனன், அந்த அரண்மனையைக் கண்டு அதை அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டான்.
யுதிஷ்டிரனைச் சகுனியின் மூலம் சூதாட்டத்தில் ஏமாற்றி, பாண்டவர்களைப் பனிரெண்டு வருடங்கள் கானகத்திற்கும்,ஒரு வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழவும் பணித்தான். ஆக அந்த நாடு கடத்தலை முழுப் பதிமூன்று வருடங்களுக்கு விதித்தான்.
பதினான்காவது வருடத்தில், பாண்டவர்கள் திரும்பி வந்து தங்கள் சொத்துக்களைக் கோரினர். அவர்களால் அதைப் பெற முடியவில்லை. அதன் காரணமாகப் போர் தீர்மானிக்கப்பட்டது.
பாண்டவர்கள் மொத்த க்ஷத்திரிய குலத்தையே அழித்து, மன்னன் துரியோதனனைக் கொன்று, பேரழிவிற்குள்ளான தங்கள் அரசைப் பெற்றனர். இதுதான் எந்தச் செயலையும் தீய ஆசைகளால் கவரப்பட்டு செய்யாதவர்களான பாண்டவர்களின் வரலாறு.
ஓ வெற்றிபெற்ற ஏகாதிபதிகளில் முதன்மையானவனே! ஜனமேஜயனே இதுதான் ஒற்றுமையின்மையின் காரணமாகக் கௌரவர்கள் தங்கள் அரசை இழந்து, பாண்டவர்கள் வெற்றியை அடைந்த வரலாறு" என்றார் வைசம்பாயனர்
ஜனமேஜயன் "ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {வைசம்பாயனரே} குரு குலத்தவர்களின் பெரும் செயல்களை விளக்குவதும், மஹாபாரதம் என்று அழைக்கப்படுவதுமான வரலாற்றை நீர் சுருக்கமாகச் சொல்லிவிட்ட போதிலும்,
ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! வைசம்பாயனரே அந்த அற்புதமான விவரிப்பை முழுமையாகச் சொல்வீராக. அதைக் கேட்பதில் நான் {ஜனமேஜயனாகிய நான்} பெரும் ஆவல் கொண்டுள்ளேன்.
எனவே, அதை நீர் முழுமையாகச் சொல்வீராக. இப்படி அந்தப் பெரும் வரலாற்றை மணிச்சுருக்கமாகக் கேட்பதில் நான் மனநிறைவுகொள்ளவில்லை.
ஆசிரியர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் கொன்ற அந்த பாண்டவர்கள், அதற்காகக் கொண்டாடப்படுகிறார்கள் என்றால் அதன் காரணம் சிறியதாக இருக்கமுடியாது.
நேர்மையானவர்களும், தாங்களே பழி வாங்கும் திறன் கொண்டவர்களுமான அந்த பாண்டவர்கள், ஏன், அந்தப் பொல்லாத கௌரவர்களின் துன்புறுத்தலை அமைதியாக ஏற்றனர்?
ஓ வைசம்பாயனரே, பெரும்பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனும், பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவனுமான அந்தப் பீமன், ஏன் தவறுகளைப் பொறுத்து தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்?
துருபதனின் மகளும், கற்புள்ளவளுமான திரௌபதி, அந்தப் பாவிகள் தன்னைத் துன்புறுத்தும் போது, அவர்களை எரித்துவிடும் சக்தி கொண்டிருந்த போதும், அந்தத் திருதராஷ்டிரனின் மைந்தர்களைத் தனது கோபப் பார்வையால் ஏன் எரிக்கவில்லை?
குந்தியின் மற்ற இரு மகன்களும் (பீமனும், அர்ஜுனனும்), மாத்ரியின் இரு மகன்களும் (நகுலனும் சகதேவனும்) அந்தப் பாவிகளான கௌரவர்களிடம் காயப்பட்டும் தீய பழக்கமான சூதாட்டத்தின் அடிமையாக இருந்த யுதிஷ்டிரனை ஏன் அனுசரித்துச் சென்றார்கள்?
அறவோரில் முதன்மையானவனும், தர்ம தேவதையின் புதல்வனுமான யுதிஷ்டிரன், தனது கடமைகளைச் சரியாகச் செய்தும், ஏன் அந்தப் பெரும் துன்பத்திற்கு ஆளானான்?
அச்சமின்றிப் போர்புரியும் மாந்தர்களை தனது கணைகளால் வேறு உலகத்திற்கு அனுப்பியவனும், கிருஷ்ணனைத் தேரோட்டியாகக் கொண்டவனுமான அந்தப் பாண்டவத் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏன் அப்படிப்பட்ட துன்புறுத்தலுக்கு ஆளானான்?
ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, நடந்தவை அனைத்தையும் உள்ளவாறே எனக்குச் சொல்வீராக. அந்தப் பெரும் தேர்வீரர்கள் சாதித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்றான்
{ஜனமேஜயன்}.
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயனே, அதைக் கேட்பதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்வாயாக. கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} சொல்லப்பட்ட இந்த வரலாறு மிகப் பெரியதாகும். இது வெறும் தொடக்கம்தான். நான் அஃதை உரைக்கிறேன். அளவிட முடியாப் பெரும் மனோபலம் கொண்டவரும், உலகங்கள் அனைத்திலும் வழிபடப்படுபவரும், சிறப்பு மிகுந்தவருமான பெரும் முனிவர் வியாசர் அருளிய அந்த முழுத் தொகுப்பையும் முழுமையாக நான் மறுபடியும் சொல்கிறேன்.
அளவில்லா மனோபலம் கொண்ட சத்தியவதி மகனால் {வியாசரால்} படைக்கப்பட்ட இந்தப் பாரதம் நூறாயிரம் {100000} சுலோகங்களைக் கொண்டதாகும்.
அடுத்தவருக்கு இஃதை யார் படித்துக் காட்டுகிறார்களோ, யார் இதைக் கேட்கிறார்களோ, அவர்கள் பிரம்மனின் உலகை அடைந்து, தேவர்களுக்குச் சமமாக இருப்பர்.
இந்தப் பாரதம் வேதங்களுக்கு இணையானது; புனிதமானது; அருமையானது; கேட்பனவற்றிலெல்லாம் சிறந்தது. இது முனிவர்களால் வழிபடப்படும் ஒரு புராணமுமாகும்.
அர்த்தம், காமம் (தர்ம,அர்த்த,காம,மோக்ஷ)சம்பந்தமான பயனுள்ள கருத்துகள் பல இதில் அடங்கியுள்ளன. இந்தப் புனிதமான வரலாறு , நம் இதயத்தைப் வீடுபேறு அடைதலில் ஆர்வம் கொள்ள வைப்பதுமாகும்.
தாராளவாதிகளும், உண்மை நிறைந்தவர்களும், நம்பிக்கையுள்ளவர்களுமான மனிதர்களுக்கு, வியாசரின் இந்த வேதத்தை, உரைக்கும் கல்விமான்கள் பெருஞ்செல்வத்தை அடைகின்றனர்
கருவறையிலேயே கருவைக் கொல்லும் பாவம் கூட இதைக் கேட்பதால் அகலும். ஒரு மனிதன் எவ்வளவுதான் கொடூரமானவனாகவும், பாவியாகவும் இருந்தாலும், இந்த மகாபாரத வரலாற்றைக் கேட்பதால், கிரகணம் முடிந்தவுடன் ராகுவிடம் இருந்து விடுபடும் சூரியனைப் போல, அவனிடமிருந்து எல்லாப் பாவங்களும் அகலும்.
இந்த மகாபாரத வரலாறு ஜெயம் என்று அழைக்கப்படுகிறது. வெற்றியடைவதில் விருப்பம் கொண்டோர் அனைவரும் இதைக் கேட்க வேண்டும்.

..
..

Create a free account or login to participate in this discussion