Shurpanaka Vishravas

Is your surname Vishravas?

Research the Vishravas family

Share your family tree and photos with the people you know and love

  • Build your family tree online
  • Share photos and videos
  • Smart Matching™ technology
  • Free!

About Shurpanaka Vishravas

Story of Shurpanakhi

-SURPANAKHA

The youngest child of Rishi Vishrava and his second wife, Kaikesi, Shurpanakha was given the name of Minakshi "Diksha" at birth. As beautiful as her mother Kaikesi and her grandmother Ketumati had been before her, Shurpanakha grew up and secretly married the Danavas prince of Kalkeya Danava clan, Vidyutjihva.Ravana got furious at Shurpanakha for marrying a Danava the affirmed enemies of Rakshasas and was about to punish her but Mandodari convinced him to respect the wish of his sister,thus Ravana accepted Shupanakha, her husband and danavas as relatives officially.At the time of conquering Rasatala (the underworld), her brother, Ravana decided to visit her newly married sister,where he confronts Vidyutjihva's true motives to marry Shurpanakha to kill Ravana,in Shurpanakha's absence Vidyutjihva attackedkka Ravana in defence he killed his brother-in-law.[2] This earned Ravana his hurt and miserable sister's great displeasure, and the widowed Shurpanakha then split her time between Lanka and the woods of Southern India, sometimes,living with her forest-dwelling Asura relatives, Khara and Dushana,on Ravana's orders According to Valmiki, she met the exiled Prince Rama of Ayodhya, during one such visit to the Forest of Panchavati, and was instantly smitten by his youthful good looks. Rama meanwhile spurned her advances, telling her that he was faithful to his wife Sita and thus would never take another wife. Rejected, Surpankha then approached his younger brother, Lakshmana, who reacted in a similar manner and said she was not what he desired in a wife. Eventually seeing that the brothers were making fun of her, the humiliated and envious Shurpanakha attacked Sita but was thwarted by Lakshmana, who cut off her nose and sent her back to Lanka. Shurpanakha first went to her brother Khara, who sent 7 Rakshasa warriors to attack Rama, who easily dispatched them. Khara himself then attacked along with 14,000 soldiers, all of which were killed except for Akampan, Sumali's son and Kaikesi's brother, who fled to Lanka. She then went straight to Ravana's court and enticed her brother to abduct and wed Sita by extolling her virtues and beauty. Despite opposition from their brother, Vibhishana, Ravana kidnapped Sita, triggering the Battle of Lanka. Although Shurpanakha receives no further mention from Valmiki, it has been suggested that she continued to live in Lanka after Vibhishana succeeded Ravana as king. She and her half-sister Kumbini are supposed to have perished at sea a few years later.

  • சூர்ப்பனகை தன் கணவனான வித்யுத்ஜிகவனின் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தாள் இருவரும் மிக சூர்ப்பனகை அன்பாக சந்தோஷமாக இல்லறம் நடத்தி வந்தனர் இடையில் எதிர்பாராத விதமாக இராவணன் அவளது காதல் வாழ்வை அழித்தான், தங்கையின் வாழ்வை ஒரு அண்ணன் அழிப்பானா...? இராவணன் தான் தனது பிரியமான தங்கையான சூர்ப்பனகையை காலகேயர்கள் என்ற பலம் வாய்ந்த அரக்கர்கள் கூட்டத்தில் ஒருவனான வித்யுக்ஜிகவன் என்பவனுக்கு திருமணம் செய்து வைத்தான் ஒருமுறை இராவணன் தன் தவ வலிமையை அதன் பெருமையை மூவுலகுக்கும் காட்ட மூவுலகுக்கும் திக்விஜயம் செய்தான். திக்விஷயம் செய்த இராவணன் மேலுலக தேவர்களையும் கந்தவர்களையும் வென்றான் இறுதியாகக் அரக்கர்களில் பலம்வாய்ந்த காலகேயர்கள் என்பவர்களை எதிர்க்க துணிந்தான் காலகேயர்கள் என்பவர்கள் அரக்கர்களில் ஒரு விசேஷ பிரிவினர். அவர்கள் பொன்னை போன்ற தங்கமயமான நிறத்தை உடையவர்கள். அந்த காலகேயர்களும் இராவணனனைப் போலவே பிரம்மாவை நோக்கி தவமிருந்து அளவற்ற வரங்களைப் பெற்றவர்கள். அவர்களும் மனிதர்களைத் தவிர வேறு யாராலும் தங்களை வெல்ல அழிக்க முடியாத அளவு வரம் பெற்றவர்கள் எனவே அரக்கனான இராவணனனால் இவர்களை ஜெயிக்க இயலாது இராவணனுக்கும் இது தெரியும் ஆனாலும் வீண் கர்வத்திற்காகக் காலகேயர்களை எதிர்த்தான் இராவணன் காலகேயர்களை எதிர்க்க பல முக்கிய வீர தீர காலகேயர்கள் இல்லாத சமயமாக பார்த்து வீரமாக சென்றான். முக்கிய காலகேயர்கள் இல்லாததால், அந்த காலகேயர்கள் சார்பாக சூர்பனகையின் கணவர் வித்யுத்ஜிகவன் இராவணனை எதிர்த்தான் தங்கையின் கணவரை எதிர்த்து போரை நிறுத்தி விட்டு திரும்பிச் செல்லாமல் வீணான அகம்பாவத்தால் இராவணனன் அவருடன் போரிட்டு வெற்றி பெற முடியாமல் ஒரு சூழ்ச்சி செய்து இரக்கமின்றி தங்கையின் கணவனான வித்யுத்ஜிகவனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தி வெற்றி பெற்றதாக கொக்கரித்தான் கணவனின் மரண செய்தியறிந்து ஓடோடி வந்து சூர்ப்பனகை கதறித் துடித்து அழுது புரண்டாள் தங்கையின் வாழ்க்கையை அழித்த மனவுறுத்தல் கிஞ்சித்தும் இன்றி வெற்றி களிப்பில் இராவணன் தனது பயணத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சென்று விட்டான் சூர்பனகை தன் கணவன் சடலத்தின் முன் சபதமேற்கிறாள் என் பிராணநாதனே உம்மை கொன்றவனை நான் கொல்வேன் என்னால் நேரடியாக முடியாவிட்டாலும் உன்னை சூழ்ச்சி செய்து கொன்றது போல் சூழ்ச்சி செய்தாவது கொடியவனான என் அண்ணன் இராவணனை அழிப்பேன் என வீர சபதமேற்றாள் சூர்ப்பனகை சூர்ப்பனகையின் சபதம் செய்தது போல் அவளது சூழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி இராவணனின் அழிவு ஒரு மானிடரால் மட்டும் தான் இராவணனைக் கொல்ல முடியும் என உணர்ந்தவள் எப்படி இராவணன் தனக்கு நல்லது செய்வதுப் போல் நாடகமாடி தன்னைத் ஒருவாறு தேற்றி கர தூஷணர்கள் என்னும் அரக்கர்கள் கட்டுபாட்டில் உள்ள பஞ்சவடி பகுதிக்கு அனுப்பியதை ஏற்றதுப்போல் நடந்துக்கொண்டு இருந்தாளோ அதுபோல இராவணனை அழிக்க தக்கக் காலத்திற்காகவும் காத்திருந்தாள் அப்படியாக வாழ்ந்து வரும் சமயத்தில் தான் பஞ்சவடியில் அண்ணல் ஶ்ரீஇராமரைக் கண்டு இவரால் தன் அண்ணன் இராவணனை அழிக்க முடியும் என எண் ணி ஶ்ரீஇராமருக்கும் இராவணனுக்கும் தொடர்பை ஏற்படுத்த தன்னால் என்ன செய்யமுடியும் என சிந்தித்தே ஶ்ரீஇராமரை திருமணம் செய்ய விரும்புவதாக பிடிவாதம் பிடித்து இலட்சுமணரால் மூக்கறுபட்டாள் உடனே இராவணனின் ஆணைப்படி பஞ்சவடியை ஆண்டு வந்த தன் மற்ற சகோதர்களான கர தூஷணாதிகளிடம் ஶ்ரீஇராமனால் தனக்கேற்பட்ட அவமானத்தைக் கூறினாள் அவர்களும் பெரும் படையுடன் வந்து எதிர்த்தனர் அவர்களை தனியாக நின்று இராமர் அழித்ததையும் கண்ணாரக் கண்டாள் தான் இராவணனைக் கொல்ல சரியான நபரைக் கண்டுவிட்டோம் என ஆனந்தபட்டு நேரே இலங்கைக்குச் சென்றாள் பஞ்சவடியில் நடந்ததை அப்படியே சொல்லாமல் கொஞ்சம் மாற்றி சொன்னாள் ஏற்கனவே தன் சகோதரனான குபேரனின் மருமகளானான ரம்பையை மானபங்கப்படுத்திய கொடியவனே நம் அண்ணன் இராவணன் என அறிந்தவள் மேலும் விருப்பமில்லாதப் பெண்ணை இனி நீ தொட்டால் தலை வெடித்துச் சாவாய் என ரம்பை இராவணனைச் சபித்ததையும் இனைத்து ஒரு திட்டம் போட்டாள் ரம்பையின் அந்த சாபத்தின் காரணத்தால் தான் அவன் சீதையைத் தூக்கி வந்தபின்னும் தொடவில்லை தன் மரணத்திற்கு அஞ்சியே சீதையைத் தொட அஞ்சினான்.சூர்பனகைக்கு தெரியும் தன் அண்ணன் பெரிய பெண்பித்தன் என்று..எனவே அவள் சீதையின் அழகைப் பலமடங்காக சிலாகித்து வர்ணித்தாள் அண்ணா அவ்வளவு அழகான சீதையை நீ அடையாவிடில் உன் பெருமைக்கு மாபெரும் இழப்பு எனத் தூண்டிவிட சூர்பனகை விரித்த வலையில் மாட்டிய இராவணன் இறுதியில் சூர்பனகை எண்ணப்படியே சீதா தேவியை சிறை பிடிக்க செய்து அதனாலேயே ஶ்ரீஇராமரால் கொல்லப்பட்டான் மகாபாவி இராவணன் இறந்ததைக் கண்ணாரக் கண்டுகளித்தச் சூர்ப்பனகை ஶ்ரீஇராமரையும் சீதையையும் ஆத்மார்த்தமாக வணங்கி விட்டு தன் சபதம் முடிந்தத் திருப்தியில் தனது சகோதரனான விபீஷணனின் ஆட்சியின் கீழ் அவள் இருக்க விரும்பாமலும் தன் கணவனை கொன்ற இராவணன் ஆட்சி செய்த இடத்திலும் அவள் இருக்க விரும்பாமலும் கண்கானாத இடத்திற்க்கு சென்று இறுதி காலத்தை கழித்தாள் சூர்பனகையின் பதிபக்தியும் மதியூகமும் தன் வாழ்வை அழித்ததால் பழி தீர்த்த மனவுறுதியும் அவள் நல்லவள் என்ற முகம் மறைக்கப்பட்டு அனைவரும் வெறுக்கும்படி காவியத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு பரிதாபமான ஜீவனே! (மூலம் : வால்மீகி முனிவர் எழுதிய இராமாயண உத்தர காண்டம்)

-

view all

Shurpanaka Vishravas's Timeline