18TH DAY WAR AND FINAL FIGHT BETWEEN BHEEMA AND DURIYIDHANA

Started by Private on Thursday, June 25, 2020
Problem with this page?

Participants:

  • Private
    Geni member

Related Projects:

18 th day mahabharat war and FIGHT BETWEEN BHEEMA AND DURIYODHANA

#கண்ணா!
தர்மனைக் கோபிக்காதீர்!
நானும்
பலராமனின் சீடன்தான்!
கட்டாயம் துரியோதனனை வெல்வேன்!
இந்தக் கதை யுத்தத்தில்
அவன் கதையை முடிப்பேன்!
சந்தேகம் வேண்டாம் கண்ணா!
சத்தியமாய்
அவனை வெல்வேன்!!
#பீமனே!
நீ பலமானவன்தான்!
வெற்றியின் மமதையில்
நீ சற்று மிதந்தாலும்
உன்னை அவன்
மிதித்து விடுவான்!!
அவன் இப்போது
பதுங்கிய புலி!!
இனி இறப்பிற்கு
அவன் அஞ்சமாட்டான்!!
கவனமாகப்
போரிட வேண்டும்!!
கண்ணா!
பீமனின் பெருமை
சொல்லி மாளாதது!!
கட்டாயம் அவன் வெல்வான்!!
#சாத்யகி!
நம்பிக்கை இல்லாமலா
இந்தக் கண்ணன்
இவர்களின் பக்கம் நிற்கிறான்?
துரியோதனனை
கதைப் போருக்கு
அழைத்தான் பீமன்!!
#துரியோதனா!
எந்தத் தவறினையும்
செய்யாத எங்கள் மீது
நீ கொண்ட
#தேவையற்ற #வஞ்சமே
இந்தக் குருஷேத்திரப் போர்!!
எல்லோரையும் கொன்று
ஒற்றையாய் நிற்கிறாய்!!
இன்னும் சில நொடிகளில்
நீயும் கொல்லப்படுவாய்!!
பீமனே!
வழக்கம்போல்
பேசிக் கொண்டு இருக்காதே!!
உன்னைக் கொன்று
எனக்காக இறந்தவர்களுக்கு
நான் அஞ்சலி
செலுத்த வேண்டும்!!
இந்தக் கதைப் போர் மட்டும்
தர்மத்தின் வழி நடந்தால்
வெற்றி எனக்கேதான்!!
அச்சமயம்
#பலராமர் அங்கு வந்தார்!!
வாருங்கள் அண்ணா!
தீர்த்த யாத்திரை
சிறப்பாக முடிந்ததா?
என்ன கண்ணா!
சாதித்து விட்டாய் போலுள்ளதே?
முடிவுக்கு வந்துவிட்டதா
நாற்காலிச் சண்டை?
இல்லை அண்ணா!
இப்போது அதன்
முடிவு தெரியும்!
சரியான நேரத்தில் வந்துள்ளீர்கள்!
உங்களது மாணவர்களுக்கிடையே
இறுதியாய் ஒரு கதை யுத்தம்!
என் #அண்ணா #இல்லாமல்
எந்த வதமும்
#என்னால் #முடியாதே!
ஆமாம் அண்ணா!
எப்படி இந்த
இடத்தை அறிந்தீர்?
கண்ணா!
தீர்த்த யாத்திரைகள்
மிகச் சிறப்பாக அமைந்தது!
புண்ணிய தீர்த்தங்கள்
எதனையும் விடவில்லை!
வரும் வழியிலே
நாரதனைக் கண்டேன்!
அவன்தான் இங்கு அனுப்பிவைத்தான்!!
அவன் வேலையா!
நாரதனை மனதிற்குள்
#வைதான் #மாதவன்!!
கதை யுத்தம் தொடங்கியது!
#மேகங்கள் இரண்டாய்
பிரளயகாலச்
#சூரியன்கள் இரண்டாய்
மதம் கொண்ட
#பேரானைகள் இரண்டாய்
வெறி கொண்ட
#புலிகள் இரண்டாய்
#சிங்கங்கள் இரண்டாய்
வெறுப்பை உமிழும்
#நெருப்பு இரண்டாய்
#பீமனாய், #துரியோதனனாய்
அக் களத்தில் #நின்றன!!
சகுனங்கள் யாவும்
சகுனியின் மருமகனுக்குச்
சாதகமாய்த் தெரியவில்லை!!
அவன் இறக்கப்போவதை
இந்தப் பிரபஞ்சமே
மறைமுகமாய்ச் சொன்னது!!
#தர்மனே!
இவனது இறுதிக்கு
இயற்கையும் வழிமொழிந்தாயிற்று!
இவனைக் கொன்று
அதனால் நான் பெறப்போகும்
அழியாப் புகழை
உமக்கே மாலையாய் இட்டு,
அத்தினாபுரத்தின் அரியணையில்
உம்மை நான் அமர்த்துவேன்!!
நயவஞ்சகமாய்
எனை அழைத்து
என் உணவில்
நஞ்சைக் கலந்த இவன்
இன்று நாசமாகிப் போவான்!!
அரக்கு மாளிகையில் நம்மை
அழிக்க நினைத்த இவன்
இன்று அழிந்து போவான்!!
திரௌபதியை அவமானப்படுத்திய இவன்
அவனது பெற்றோரை
இனிப் பார்க்க மாட்டான்!!
துரியோதனா!
எம்மை அழிக்க நினைத்த நீ
இன்று அழிந்து போவாய்!
உன் சுயநலத்திற்காகப்
பிதாமகரைக் கொன்றாய்!
ஆசாரியரைக் கொன்றாய்!
கர்ணனைக் கொன்றாய்!
சல்லியனைக் கொன்றாய்!
தொன்னூற்றொன்பது
தம்பியரையும் கொன்றாய்!
எனது சபதம்
நிறைவேறும் நாள் இன்று!
அதனால்தான்
நீ களத்திலே சாகாமல்
எனக்கு விருந்தாக
இங்கே தனித்துள்ளாய்!!
உன் மரணத்திற்கு
அழக்கூட யாருமில்லையே!!
அடேய் பீமா!
அதிகமாகப் பேசி
களைப்படைந்து போகாதே!
உனது பேச்சுக்கெல்லாம்
பயப்படுபவனா நான்?
அத்தினாபுரமும் வேண்டாம்!
எந்தச் சுகமும் வேண்டாம்!
உன்னைக்
கொன்றால் போதுமடா!
தாமதிக்காமல்
போரினைத் துவங்கு!!
ஒருவர் மீது
ஒருவர் பாய்ந்தனர்!
இரண்டு கதைகளும் பேசின!!
அவன் இவனைத் தாக்க
இவன் அவனைத் தாக்க
சளைக்காத போர்!!
பீமனின் கவசத்தை
துரியோதனன் தகர்த்தான்!!
பீமனின் பக்கம்
வெற்றி வாய்ப்புக்
குறைவாகவே தெரிந்தது!!
#அர்ச்சுனா!
இவர்கள் இருவருமே
ஒருவரிடமே பயின்றவர்கள்!
இருவருமே இப்போரினைச்
சிறப்பாய்க் கற்றவர்கள்!
நூறு பேரில் மூத்தவனுக்குக்
கொஞ்சம்
சாமர்த்தியமும் கூடத்தான்!
இன்னொன்றும் உண்டு!
போரினைத்
தவிர்த்து ஓடியவன்
மீண்டும் களம் புகுகிறான் என்றால்
அவன் பெற்ற தோல்வியே
அழுத்தங்களைக் கொடுத்து
அவனை வெற்றியடையச் செய்துவிடும்!!
துரியோதனன்
நிலையைப் பார்!
அவனது மரணம்
யாருக்கும்
இழப்பினைத் தராது!!
பீமன் தோற்றால்
அத்தினாபுரமே அவனுக்கு!!
உன் அண்ணன் தர்மன்
பேசாமலே இருக்கலாம்!!
எதையாவது பேசி
இக்கட்டில் நம்மைச் சேர்ப்பதே
தர்மனின்
வழக்கமாகிப் போனது!!
பதிமூன்று வருட வனவாசம்!
பதினெட்டு நாட்கள் போர்!
இத்தனையும் பீமன் தோற்றால்
தேவையற்ற ஒன்றாகி விடும்!!
பீஷ்மனை வென்றதோ
துரோணரை வென்றதோ
கர்ணனை வென்றதோ
பெருமையில்லை அர்ச்சுனா!!
துரியோதனனை
வெல்ல வேண்டும்!!
உபாயங்களால்தான்
அவனை வெல்ல முடியும்!!
கண்ணா!
இப்போது
என்ன செய்ய வேண்டும்?
#மகாபாரதம் (177)




Create a free account or login to participate in this discussion