NARAYANA ASHTHIRAM
க்ஷேத்ரம் ரண க்ஷேத்ரமாகவும் ரத்த சாகரமாகவும் ஆகிவிட்டதே!!. முதல் நாள் யுத்தம் ஆரம்பித்த அன்று இந்த ரெண்டு சேனைக்கும் யுத்தம் புரிய இந்த இடம் போதாதோ என்று அல்லவா தோன்றியது. ஆயிற்று 13 நாள் ஆக்கிரோஷமாக இரு சேனைகளும் மோதி பாதிக்கு மேல் உயிர்கள் இருபக்கமும் இழந்துவிட்டாலும் யுத்தம் எப்படி முடியப்போகிறது என்றே தெரியவில்லையே?
14 நாள் ஓடியே போய்விட்டது வெற்றி தோல்வியின்றி இரு சேனைகளும் மோது கின்றன. எண்ணற்றோர் மாண்டனர். குதிரை கள், யானைகள் இறந்தன. கணக் கின்றி ரதங்கள் பொடிபட்டு கிடக்கின்றன. குவியல் குவியல்களாய் இறந்த உடல்களை சூழ்ந்து கொண்டு கழுகுகள் வட்டமிடுகின்றன. அஸ்வத்தாமன் களம் இறங்கிவிட்டான் வெறியுடன். தன் தந்தையைக் கொன்ற பாண்டவர்களை அழிக்க வந்து விட்டான். இதோ அவனது நாராயண அஸ்தரம் கிளம்ப போகிறது. அதை தான் அவன் இப்போது பிரயோகிக்க தீர்மானித்து விட்டான். . அதை எவராலும் தடுக்கவோ நிறுத்தவோ எதிர்க்க வோ முடியாதே. தனுர் வித்தையின் சிகரமாக விளங்கிய ஆச்சார்யர் துரோணர் மகன் அவரிடமிருந்து கற்ற அஸ்திர வித்தைகளை இன்று காட்டப்போகிறான்.
கிருஷ்ணன் சிரித்தான்.
''அட என்னுடைய அம்சம் எனக்கு எதிராக செயல்படப் போகிறதா?'' நல்ல வேடிக்கை இது?
“அர்ஜுனா, யாராலும் தடுக்கமுடியாதது நாராயணாஸ்திரம். எதிர்பட்டவரை, எதிர்த்து நிற்பதை, எல்லாம் அழிக்கக்கூடிய வலிமை வாய்ந்த பாணம். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி தான் உண்டு. சகல ஆயுதங் களையும் கீழே போட்டு விட்டு நாராயணா என்று சரணா கதி அடைவது ஒன்றே வழி . பாண்ட வர் களுக்கும் உன் சேனைக்கும் உடனே இதை தெரியப்படுத்து. நேரம் அதிகமில்லை. அதோ அஸ்வத்தாமன் வந்துவிட்டான். அவன் நாராயண அஸ்திரத்தை எடுத்து விட்டான். மந்திரம் ஜபித்துக் கொண்டிருக்கிறான். எந்த கணமும் அது புறப்பட்டுவிடும். சர்வ ஜாக்கிர தையாக நீங்கள் செயல்படவேண்டும். நான் சொன்னதை எல்லோரும் செய்யுங்கள். ஜல்தி” என்றான் கிருஷ்ணன். அனைவருக்கும் செய்தி பரப்பப் பட்டது. அனைவரும் தத்தம் கைவசம் உள்ள ஆயுதங்களை எறிந்து விட்டு அமைதியாக நின்றனர், ஒருவனைத் தவிர.
பீமசேனன் “நான் இதற்கெல்லாம் அஞ்சுப வனல்ல. அதை எதிர்க்கும் பலம் என்னிடம் உண்டு. வரட்டும் ஒரு கை பார்க்கிறேன் என்றான்”.
இதோ வந்து விட்டது அவனை நோக்கி நாராயண அஸ்திரம். மற்ற எவரும் எதிர்க்கா ததால் நேராக பீமனிடம் அணுகிவிட்டது அந்த அஸ்திரம். நெருப்பு ஜ்வாலையுடன் அவனை சூழ்ந்துகொண்டு துன்புறுத்தியது.
“பீமா உன் ஆயுதங்களை கீழே போடு” என்று அலறினான் அர்ஜுனன். பீமன் காதில் இது விழவில்லை தன்னாலியன்ற வரை போராடிக் கொண்டிருந்தான் உடலெல்லாம் தீ பிழம்பு சூழ துடித்தான் பீமன்.
“அர்ஜுனா வருணாஸ்திரத்தை பிரயோகித்து பீமனுக்கு உதவு” என்றான் கிருஷ்ணன்.
நாராயணாஸ்திரத்தை எதிர்க்காமல் பீமன் மீது வருணானஸ்திரம் பொழிந்தான் அர்ஜுனன்.
கிருஷ்ணன் புரிந்து கொண்டான். தான் உதவ வேண்டிய சமயம் வந்து விட்ட தென்று. தேரிலிருந்து குதித்து இறங்கினான் பீமனை நோக்கி ஓடினான் அவனை அணுகி அவனை அணைத்துகொண்டான். கிருஷ்ணன் மீது நாராயணாஸ்திரம் பலனற்றது. பீமனின் ஆயுதங்களை கிருஷ்ணன் பிடுங்கி எறிந்தான். அஸ்திரம் பீமனை விட்டு சற்று விலகியது.
“பீமா உன் வீரம் மெச்சத்தக்கது. ஒரு க்ஷத் ரியனின் தைர்யத்தை வெளிப்படுத்தினாய். ஆனால் வீரம் தெய்வ சக்தியுடன் மோது வதற்கில்லை புரிகிறதா” என்ற கிருஷ்ணனை நன்றிபெருக்குடன் வண ங்கினான் பீமன்.
--